பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: போரிஸ் ஜான்சன் அதிரடி அறிவிப்புகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
233Shares

பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அடுத்த வியாழனன்று நடைபெற இருக்கும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், பல மில்லியன் பணியாளர்களுக்கு 100 பவுண்டுகள் வரி குறைப்பு செய்ய இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார் அவர்.

பதவியேற்ற முதல் 100 நாட்களில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக சட்டத்தில் பல அதிவேக மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கர குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடினமான தண்டனை விதித்தல், மருத்துவத்துறை மற்றும் போக்குவரத்து முதலான முக்கிய சேவைகளை பாதிக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்வதை கட்டுப்படுத்துதல் முதலான பல திட்டங்கள் மீது கவனம் செலுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே 100 நாட்களுக்குள், சமுதாய அக்கறை தொடர்பான சவால்களுக்கு தீர்வை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், புலம்பெயர்ந்தோர் மருத்துவ செலவுகளுக்காக 625 பவுண்டுகள் உப கட்டணம் செலுத்தும் சட்டம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றால், பிப்ரவரி மாதத்தில் முதல் பட்ஜெட், ஜனவரி 31 அன்று பிரெக்சிட் நிறைவேற்றம் ஆகிய வாக்குறுதிகளையும் அளித்துள்ளார் ஜான்சன்.

இன்னும் வெறும் ஏழு நாட்களில் பிரித்தானிய மக்கள் தங்களுக்கு ஒரு பெரும்பான்மை அரசு வேண்டுமா, அல்லது தொங்கு நாடாளுமன்றம் வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், ஜனவரி இறுதியில் பிரெக்சிட்டை நிறைவேற்றுவோம்.

2020ஆம் ஆண்டு, பிரெக்சிட் குறித்த வாக்குவாதங்களையும் நிலையில்லாத்தன்மையையும் மறக்கச் செய்யும் ஒரு ஆண்டாக இருக்கும். மக்கள் அதை விரும்புகிறார்களோ அதற்கு முன்னுரிமை கொடுக்க நாடாளுமன்றம் ஆவன செய்யும்.

ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், நிக்கோலா ஸ்டர்ஜனின் SNP ஆதரவுடன் ஜெரமி கார்பினை பிரதமராகக் கொண்ட ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையும்.

பிறகு, அடுத்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு குறித்து வாதிட்டுக்கொண்டு, வர்த்தகமும் குடும்பங்களும் அதோகதியாக விடப்பட்டு, அடுத்து என்ன என திட்டமிட முடியாத ஒரு சூழலைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றார் போரிஸ் ஜான்சன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்