போராட்ட பயத்தால் ராணியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளவரசருக்கு தடை?

Report Print Vijay Amburore in பிரித்தானியா
57Shares

கிறிஸ்துமஸ் தினத்தன்று சில அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், ராணியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளவரசர் ஆண்ட்ரூவிற்கு தடை விதிக்கலாம் என அரச ஆலோசகர்கள் தீவிரமாக கலந்தாலோசித்து வருகின்றனர்.

அமெரிக்க தொழிலதிபரும், சிறையில் தற்கொலை செய்துகொண்ட பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கொண்டிருந்த நெருங்கிய நட்பால், அரச குடும்பமே பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இதனால் அவரை பொதுக்கடமைகளில் இருந்து நீக்கி, அரண்மனையில் இருந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான அமைப்புகளும், இணையதளவாசிகளும் தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில், ராணியுடன் இளவரசர் ஆண்ட்ரூ கலந்துகொள்ள தடைவிதிக்கலாம் என அரச ஆலோசகர்கள் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அன்றைய தினம் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தேவாலயத்திற்கு வெளியில் இருப்பார்கள். இளவரசர் வரும் நேரத்தில், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான அமைப்புகள் போராட்டம் நடத்த ஆரம்பித்தால், உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்து சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என கருதுகின்றனர்.

"ராணி ஏற்கனவே தனது மகனை மிகவும் நேசிப்பதால் இந்த நிலைமை குறித்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்" எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்