பிரித்தானிய உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு கடுமையான வாந்தி பேதி: பின்னர் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
448Shares

பிரித்தானிய உணவகம் ஒன்றில் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கடுமையான வாந்தி பேதி ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்துதான் அது பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Lancasterஇலுள்ள Sir Richard Owen pub என்ற உணவு விடுதியில் சாப்பிட்ட அத்தனை பேருக்கும் சிறிது நேரத்தில் கடுமையான வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் நோரோ வைரஸ் என்ற கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆனால் அது இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் மற்றவர்களைத் தாக்கும் என நாங்கள் நினைக்கவில்லை என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.

இதற்கிடையில், உணவகத்தை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாகவும், சுகாதாரமான முறையில் உணவகம் சுத்தம் செய்யப்பட்டபின், வெள்ளியன்று மீண்டும் உணவகம் திறக்கப்பட இருப்பதாகவும் உணவகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிக்கு வந்த ஒரு வாடிக்கையாளருக்கு வைரஸ் தொற்று இருந்த நிலையில், அது அவரிடமிருந்து உணவக ஊழியருக்கு தொற்றியுள்ளது.

உணவக ஊழியருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அது அவர் உணவு தயாரிப்பதாலும், உணவு வழங்குவதாலும் எளிதில் பரவிவிடும் என்பதால், அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்