இந்திய பெண் மருத்துவருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த சோகம்: மாரடைப்பை கவனிக்காமல் விட்ட மருத்துவர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
168Shares

பிரித்தானியாவில் அரசு மருத்துவ துறையின் ஊழியர் பற்றாக்குறையால் இந்திய பெண் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவத்துறையின் கீழ் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கிரேட்டர் மான்செஸ்டரைச் சேர்ந்த Dr அனிஷா மல்ஹோத்ராவுக்கு (68) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதை அவரது மருத்துவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். மாரடைப்பு ஏற்பட்டு 11 நாட்களுக்குப் பிறகே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட விடயத்தை அவரது மருத்துவக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

முதுகுத்தண்டில் ஏற்பட்ட பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனிஷாவுக்கு இரண்டாவது முறையும் மாரடைப்புஏற்பட்டுள்ளது.

ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற அனிஷா பின்னர் கண் விழிக்கவேயில்லை. 25 ஆண்டுகளாக அரசு மருத்துவத்துறைக்காக உழைத்த என் தாயை காப்பாற்ற மருத்துவத்துறை தவறிவிட்டது என்கிறார் அனிஷாவின் மகனான Dr அசீம் மல்ஹோத்ரா.

அவரும் அரசு மருத்துவத்துறையில் பணியாற்றும் ஒரு இதய நோய் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவத்துறையில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக தனது தாயை இந்த வயதிலேயே இழந்துவிட்டதாக வருந்துகிறார் அசீம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்