உறையவைக்கும் குளிர்... கல்லறைத் தோட்டத்தில் வழிபோக்கர் கண்ட காட்சி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
979Shares

பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் ஆதரவற்ற நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எசெக்ஸ் பகுதியில் உள்ள செயின்ட் ஜான் தி எவாஞ்சலிஸ்ட் தேவாலயத்தில் வியாழக்கிழமை காலை வழிபோக்கர் ஒருவரால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Georgina Pierson என்ற பெண்மணி தமது நாயுடன் காலை நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போதே தேவாலயத்தின் கல்லறையில் ஆணின் சடலம் ஒன்றை அவர் கண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்துள்ளார். அந்த நபரை முதலில் தாம் நெருங்கி சென்று விசாரிக்க முயன்றதாகவும்,

ஆனால் நெருங்கி சென்ற நிலையிலேயே அவர் மரணமடைந்த சம்பவம் தமக்கு தெரியவந்தது என Georgina Pierson தெரிவித்துள்ளார்.

(Image: Essex Live WS)

அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் வெப்பநிலையானது -1.2 Celsius இருந்தது எனவும், உறையவைக்கும் குளிரில் அந்த நபர் போக்கிடம் இன்றி கல்லறைத் தோட்டத்தில் தஞ்சமடைந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்