ஆறு மணி நேரம் நின்றுபோன பிரித்தானிய பெண்ணின் இதயம்: கடவுளாக வந்த ஸ்பெயின் மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
256Shares

ஸ்பெயின் நாட்டில் கடும் பனிப்புயலில் சிக்கி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்மணியை 6 மணி நேரத்திற்கு பின்னர் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

பார்சிலோனா நகரில் குடியிருக்கும் 34 வயதான பிரித்தானியர் ஆட்ரி மார்ஷ், நவம்பர் 3 ஆம் திகதி பனிப்புயலில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து அவரது உடற்வெப்பம் திடீரென்று சரிவடைந்துள்ளது. மட்டுமின்றி அவருக்கு அதனால் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மீட்பு குழுவினர், அவரை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் Vall d’Hebron மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த மார்ஷ், மருத்துவர்களின் நீண்ட போராட்டத்திற்கு இறுதியில், 6 மணி நேரத்திற்கு பின்னர் அவரது இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

மார்ஷ் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்படும்போது அவரது உடல் வெப்பம் 20 டிகிரி செல்சியஸ் என இருந்தது எனவும், பொதுவாக 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிப்புயலில் சிக்கிய பின்னர் அவரது உடல் வெப்பம் சரிவடைந்ததே, அவரது உள்ளுறுப்புகள் சேதமடையாமல் காக்கப்பட்ட காரணமாக அமைந்தது எனவும் ஸ்பானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பில் இருந்து மார்ஷ் பிழைத்துக் கொண்டாலும், முற்றாக அவர் இன்னும் குணமாகவில்லை என்றே மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்