14 வயதில் கர்ப்பம்... மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய இளம் தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
395Shares

பிரித்தானியாவில் 14 வயதில் கர்ப்பமான இளம் தாயார் ஒருவர் பல்கலைக்கழக பட்டம் பெற்று, தமது 6 வயது மகளுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் குடியிருந்து வருபவர் 21 வயது ரேச்சல் காம்பே. 15 வயதில் தமது படிப்பை விட்டுவிட்ட இவர் இந்த வாரம் லீட்ஸ் டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் தமது கனவை நிறைவேற்றியுள்ளார்.

14 வயதில் கர்ப்பமான காம்பே, சக மாணவர்கள் மற்றும் தோழிகளால் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆனால் அந்த இருண்ட காலங்களை சாமர்த்துயமாக கடந்து தற்போது பட்டம் முடித்துள்ளது பெருமையாக இருப்பதாக காம்பே தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தனியொருவளாக தமது மகளையும் பராமரித்து கல்லூரி பாடங்களையும் கவனிக்க, குடும்பத்தாரின் உறுதுணை இருந்தது என கூறும் அவர்,

பட்டமளிப்பு விழாவில் தமது 6 வயது மகளையும் இணைத்துக் கொண்டது மறக்கமுடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் போது, எனது மகள் என் பக்கத்தில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.

பட்டமளிப்பு விழாவில் எனது பெயரை தவறாக குறிப்பிட்ட போது, அவளே எனது பெயரை திருத்தி, அது எனது தாயார் என பெருமை பொங்க கூறினாள் என்றார் காம்பே.

14 வயதில் கர்ப்பமானதும், பாடசாலையில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்.

அங்கிருந்து துவங்கியது கல்வியின் மீதான எனது போராட்டம். யார்க் கல்லூரியில் இணைந்து, அங்கிருந்து தற்போது லீட்ஸ் டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அளவுக்கு வந்துள்ளேன் என்றார் காம்பே.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்