ரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்... வெளியான வீடியோவின் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா
279Shares

பிரித்தானியாவில் மதுபோதையில் ரயிலில் மிக மோசமாக நடந்து கொண்ட 24 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bowers Gifford-ஐ சேர்ந்தவர் ஜேடி ஓ கோனல் (24). இவர் நேற்று முன் தினம் ரயிலில் மது போதையில் பயணம் செய்தார்.

அப்போது ரயிலில் இருந்த ஒரு ஆண் அருகில் சென்ற ஜேடி அவர் தோள் மீது கை வைத்து கொண்டு, என்னை எடுத்து கொள் என கூறி பாலியல் ரீதியாக மோசமாக நடந்து கொண்டார்.

இதை தட்டி கேட்ட நபர்களையும் அடித்துள்ளார், இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த பெண்ணொருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது வைரலானது.

இது குறித்து ரயிலில் பயணித்த நபர் ஒருவர் கூறுகையில், நாங்கள் அமைதியாக இருக்கும்படி ஜேடியை அறிவுறுத்தியும் அவர் கேட்கவில்லை.

இதை தட்டி கேட்டவர்கள் முகத்தில் அவர் வேகமாக குத்தியதோடு, சிலரை கீழே தள்ளியும் விட்டார் என கூறினார்.

இந்நிலையில் பொலிசாரின் கவனத்துக்கு இச்சம்பவம் சென்ற நிலையில் ஜேடியை அவர்கள் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்