பிரித்தானியாவை உலுக்கிய சம்பவங்கள் தொடர்பில் லண்டனில் பொலிஸ் அதிரடி சோதனை..14 பேர் கைது

Report Print Basu in பிரித்தானியா
374Shares

பிரித்தானியாவின் தெற்கு லண்டனில் மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனம் குறித்து நடந்த பெரும் விசாரணையைத் தொடர்ந்து 14 பேரை பிரித்தானியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 13 பேர் மனித கடத்தல் மற்றும் நவீன அடிமை குற்றங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் குடியேற்ற குற்றங்களுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய பல கட்ட நடவடிக்கையை அடுத்து, வியாழக்கிழமை காலை ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடத்தப்பட்ட வீடுகளில் மொத்தம் 24 பேர் காணப்பட்டனர் மற்றும் மருத்துவ சிகிச்சை மற்றும் மேலதிக உதவிக்காக அவர்கள் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்க் ரோஜர்ஸ் வெளியிட்ட அறிக்கைியல், பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும், இறுதியில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, மனித கடத்தல், நவீன அடிமைத்தனம் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவை பெரும்பாலும் அனைவரின் பார்வையில் நிகழ்கின்றன, மேலும் பெரும்பாலும் இந்த குற்றங்களைச் செய்பவர்கள், ஒரு நல்ல வாழ்க்கைக்காக நம் நாட்டிற்கு வந்தவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்