லண்டனில் தமிழர்களின் கழுத்தறுப்பேன் என பயமுறுத்திய அதிகாரி! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இலங்கை தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரி குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் இலங்கை தமிழர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராடினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகராக இருந்த இலங்கையை சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுப்பேன் என கூறும் வகையில் விரல்களின் மூலம் சமிக்ஞையை மூன்று தடவைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி காண்பித்தார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பிரியங்கவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரியங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன் அவர் ராஜதந்திர அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் சிலர் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்ததாகவும், ஆனால் அப்போது பிரியங்க அப்படியான சைகையை காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரியின் குறித்த நடவடிக்கையானது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, பிரியங்க அங்கிருந்த நபர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது பிரித்தானியாவின் சமூக சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தவறான நடைமுறை என நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரியங்கவுக்கு 2000 ஸ்டேலின் பவுண்களை அபராதமாக அறவிடவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதோடு வழக்கு கட்டணம், மேலதிக கட்டணம், நஷ்ட ஈடு என மொத்தமாக 4419.80 ஸ்டேலின் பவுண்களை அபராதமாக அறவிடுமாறும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்