பிரித்தானியாவில் அன்னை தெரசாவின் உதவியாளர் கொடூர கொலை! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் அன்னை தெரசாவின் முன்னாள் உதவியாளரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Mark Bloomfield (54) என்பவர் 90களில் அன்னை தெரசாவின் சிறப்பு உதவியாளராக இருந்தார், இவர் ஏராளமான தொண்டுகளை தனியாளாகவும் செய்து வந்தார்.

அதாவது இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தியது, மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் நிறுவ உதவியது போன்ற செயல்களை செய்துள்ளார்.

இந்நிலையில் Mark கடந்த ஜூலை மாதம் Swansea-ல் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு Colin Payne என்பவர் தனது காதலியுடன் வந்திருந்தார்.

அப்போது Mark பீர் கோப்பையை வைத்து Colin காதலியின் பின்பக்கம் தடவியதாக தெரிகிறது.

இதை பார்த்து ஆத்திரமடைந்த தற்காப்பு கலைகளில் வல்லரவான Colin, Mark-ஐ அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் மதுபான விடுதிக்கு வாசலில் அவரை இழுத்து வந்து தலையில் பலமாக பலமுறை அடிக்க அவர் சுயநினைவை இழந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Mark சுயநினைவு திரும்பாமலேயே அடுத்த இரண்டு நாட்களில் உயிரிழந்தார்.

இதன்பின்னர் பொலிசார் Colin-ஐ கைது செய்தனர். அவர் மீதான வழக்கு Swansea நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவில் Colin குற்றவாளி என நிரூபணம் ஆனது, இதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்