பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: ரஷ்யா வெளியிட்ட ஆவணங்களால் லேபர் கட்சிக்கு மீண்டும் ஒரு பின்னடைவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட்டுக்குப்பின் அரசு மருத்துவத்துறையை அமெரிக்காவுக்கு விற்று விட இருப்பதாக ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது குற்றம் சாட்டியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கார்பின்.

ஆனால் அவர் வீசிய ஆயுதம் அவருக்கே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 451 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை ஆதாரமாக முன்வைத்திருந்தார் அவர்.

ஆனால், அந்த ஆவணத்தை பதிவேற்றம் செய்திருந்தது ரஷ்யா என தகவல் வெளியாகியுள்ளது ஜெரமி கார்பினுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஜெரமி கார்பின் இன்னமும் அந்த ஆதாரங்களை காட்டியே போரிஸ் ஜான்சனுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஜான்சனோ அவை அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணம் வெளியான Reddit என்னும் சமூக ஊடகமே, அந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்தது ரஷ்யாவாக இருக்கலாம் என தாங்கள் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளதால் ஜெரமி கார்பினுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்