பயங்கர ஆயுதங்களால் லண்டன் நகரை பதறவைத்த கும்பல்: வெளியான வீடியோவால் உறைந்துபோன மக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று இளம் தந்தை ஒருவரை கொடூரமாக கொலை செய்யும் காணொளி ஒன்று வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் கைதான இளைஞர்கள் டைரல் கிரஹாம்(18) மற்றும் ஷீரீம் குக்ஹார்ன்( 21) ஆகிய இருவர் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது.

குறிப்பிட்ட இருவரும் கும்பலுடன் சேர்ந்து 19 வயதேயான Kamali Gabbidon-Lynck என்பவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு இன்னொரு 20 வயது இளைஞரை கொல்ல முயன்றுள்ளனர்.

இவர்கள் இருவருடன் சட்ட காரணங்களால் பெயர் வெளியிடப்படாத 17 வயது மதிக்கத்தக்க மூவரும் கமாலியை கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய சம்பவமானது கடந்த பிப்ரவரி 22 ஆம் திகதி இரவு நடந்துள்ளது. சுமார் 7 மணியளவில் 7 பேர் கொண்ட கும்பல் கமாலியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு குறிப்பிட்ட பகுதியில் ஒன்று சேர்ந்துள்ளது.

இதில் ஐவர் பயங்கர ஆயுதங்களுடன் சம்பவப்பகுதியில் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில் கமாலி இவர்களின் பார்வையில் சிக்கியதும், இந்த கும்பல் ஆயுதங்களுடன் கமாலியை துரத்தியுள்ளது.

குக்ஹார்ன் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார், ஆனால் குறி தவறியதாக கூறப்படுகிறது. கமாலியும் அவருடன் இருந்த ஒருவரும் இந்த கும்பலிடம் இருந்து தப்ப உயிரைக் கையில் பிடித்தபடி ஓடியுள்ளனர்.

ஆனால் இந்த கும்பலிடம் கமாலி தனியாக சிக்கியுள்ளார். தொடர்ந்து 8 முறை சரமாரியாக கத்தியால் தாக்கிய இந்த கும்பல், துப்பாக்கியாலும் சுட்டுள்ளது.

இருப்பினும் ரத்தம் வழிய தமது காரில் கமாலி தப்ப முயன்றுள்ளார். ஆத்திரம் அடங்காத இந்த கும்பல், காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, தப்ப முயன்ற கமாலியை மீண்டும் தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த கும்பல், தங்கள் உடைகளையும் மாற்றிவிட்டு, கார் ஒன்றில் மாயமாகியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் கமாலியை மீட்டுள்ளனர். ஆனால் அதிகாலை 3 மணியளவில் கமாலி மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்