நீங்களெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது: சக்கர நாற்காலியில் வலம் வரும் வீராங்கனையை அவமதித்த மருத்துவர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முதுகுத்தண்டில் ஏற்பட்ட பிரச்னையால் சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டி வந்தாலும், ஒரு விளையாட்டு வீராங்கனையாக சாதித்த ஒரு பெண்ணைப் பார்த்து, மருத்துவர் ஒருவர், நீங்களெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.

பிரித்தானியரான Tanni Grey-Thompson (50) சக்கர நாற்காலியுடன் வாழ்ந்தாலும் பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்கள் வென்ற வீராங்கனை.

இப்படி ஒரு பிரச்னை இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மருத்துவர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டுள்ளார் Tanni.

அப்போது உங்களுக்கு பிரச்னைகள் இருக்கும், குழந்தையை சுமப்பதும் பெற்றெடுப்பதும் கஷ்டமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால், நீங்களெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது, குறைபாடுகள் உள்ளவர்கள் பெருகிவிடுவார்கள் என்றாராம் ஒரு மருத்துவர்.

அத்துடன் நீ குழந்தையை கலைத்து விடு என்றாராம் அவர்.

அதையும் மீறி கர்ப்பமானபோது நீ எப்படி கருவுற்றாய் என்று கேட்டவர்களின் எண்ணிக்கை தனக்கு நினைவில்லை என்கிறார் Tanni (அதாவது அத்தனை பேர் கேட்டார்களாம்).

இது போதாதென்று, அவர் 37 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, ஒரு பெண் அவரை சாலையில் தடுத்து நிறுத்து நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டாராம்.

கோபமடைந்த Tanni, என் கணவனுடன் பாலுறவு கொண்டுதான் கர்ப்பமடைந்தேன், வேறு எப்படி கர்ப்பமாக முடியும் என்று சாலையில் வைத்தே கத்திவிட்டாராம். ஆனாலும் விடாத அந்த பெண், அருவருப்பாக இருக்கிறது என்றாராம்.

இப்படிப்பட்டவர்களை நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்லக் கற்றுக்கொள்ள எனக்கு 40 ஆண்டுகள் ஆயிற்று என்கிறார் Tanni.

குழந்தை பிறந்த பிறகும் மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்ற Tanni, பிறகு பிரித்தானிய தடகள அமைப்பின் இயக்குநராகியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்