பிரித்தானியா பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? முக்கியமான தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் நாளை டிசம்பர் 12ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முக்கியமான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் 650 இடங்கள் உள்ளன, அதாவது ஒட்டுமொத்த பெரும்பான்மையை வெல்ல 326 இடங்கள் தேவை.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டில் வடக்கு அயர்லாந்தில் ஏழு இடங்களை வென்ற சின் ஃபைன், பாரம்பரியமாக ராணிக்கு விசுவாசமாக இருக்க மறுத்ததின் விளைவாக வாக்களிக்கும் உரிமையை இழந்தனர்.

சபாநாயகர் மற்றும் அவர்களது மூன்று பிரதிநிதிகள் ஒரு சில சூழ்நிலைகளைத் தவிர வாக்களிக்க வேண்டிய தேவையில்லை. எனவே, 320 பேர் பெரும்பான்மையைக் நிரூபிக்க போதுமானதாக இருக்கும்.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு தொங்கு பாராளுமன்றத்தை சரியாக கணித்த YouGov's கருத்துக் கணிப்பு, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் என கணித்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி 28 இடங்களில் பெரும்பான்மையுடன் வெல்வார்கள் என்று பொதுத் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் YouGov's கருத்துக் கணிப்பு கணித்துள்ளது.

கன்சர்வேடிவ்கள் 339 இடங்களை வெல்லும் என்று அது கணித்துள்ளது, இருப்பினும் இது கடந்த மாத வாக்கெடுப்பில் கணிக்கப்பட்ட 359 இடங்களிலிருந்து 40 வீழ்ச்சியடைந்துள்ளது.

thesun

இந்த வீழ்ச்சி என்பது தொங்கு பாராளுமன்றத்தின் வாய்ப்பை அதிகரித்துள்ளது, அதே சமயம், தொழிலாளர் கட்சி 231 இடங்களைப் பெறும் என்று கணித்துள்ளது. ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 41, தாராளவாத ஜனநாயகவாதிகள் 15, பிளைட் சிம்ரு 4, கீரின் கட்சி 1 இங்களைப் பெறும் என கணித்துள்ளது.

மொத்த இடங்களைப் பொறுத்தவரை, 1987ல் மார்கரெட் தாட்சர் தலைவராக இருந்ததிலிருந்து 339 இடங்களில் கன்சர்வேடிவின் வெற்றி சிறந்த தேர்தல் செயல்திறன் ஆகும்.

thesun

ஆனால் தொழிலாளர் கட்சி 231 ஆகக் குறைந்துவிட்டால், அது 1983ல் இருந்து கட்சியின் மோசமான செயல்திறனைக் குறிக்கும்.

YouGov's கடந்த ஏழு நாட்களில் சுமார் 1,00,000 பேரை வாக்களிக்கும் நோக்கம் குறித்து பேட்டி கண்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி 311 மற்றும் 367க்கு இடையில் இறுதி எண்ணிக்கையிலான இடங்களை வெல்லக்கூடும் என்று கூறியது, அதனால், தொங்கு பாராளுமன்றத்தை நிராகரிக்க முடியாது என்று பரிந்துரைத்துள்ளது.

எங்கள் சமீபத்திய மற்றும் இறுதி கருத்துக் கணிப்பின் படி கன்சர்வேடிவ் பெரும்பான்மைக்கு வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது, டோரிகள் 2017ஐ விட 22 இடங்களை அதிகம் பெற்றுள்ளனர் மற்றும் தொழிலாளர் கட்சி 31 இடங்களை இழந்துள்ளனர் என YouGov's-ன் அரசியல் ஆராய்ச்சி மேலாளர் கிறிஸ் கர்டிஸ் கூறினார்.

இது 80-களில் இருந்து ஒவ்வொரு கட்சிக்கும் முறையே சிறந்த மற்றும் மோசமான முடிவுகளாக இருக்கும்.

ஆனால், பெரும்பான்மைக்கான் வாய்ப்பு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் மிகவும் இறுக்கமானவை, ஒருவேளை தொழிலாளர் கட்சியின் சமீபத்திய மேல்நோக்கிய போக்கு தொடர்ந்தால், தொங்கு பாராளுமன்றம் எற்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்