கட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு காலில் ஒரு கட்டி உருவாக, அவர் இன்னும் 12 மாதங்கள்தான் உயிருடன் இருப்பார் என்று கூறிவிட்டார்கள் மருத்துவர்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த Nikki Jenkins (39) ஒரு Bodybuilder-க்கு காலில் ஒரு கட்டி உருவானது.

அது வெறும் ஒரு கட்டி என்று எண்ணி மருத்துவமனைக்கு சென்ற Nikkiக்கு, மருத்துவர்கள் மிகப்பெரும் அதிர்ச்சி ஒன்றை அளித்தார்கள்.

காரணம் அது ஒரு சாதாரண கட்டி அல்ல. அது pleomorphic rhabdomyosarcoma என்று அழைக்கப்படும் ஒரு அபூர்வ வகை புற்றுநோய்.

முதலில் அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டார்கள் மருத்துவர்கள். ஆனால், அந்த கட்டி சில மாதங்களுக்குப்பின் மீண்டும் தோன்றிவிட்டது.

அவரை சோதித்த மருத்துவர்கள், அந்த புற்றுநோய் மீண்டும் வந்துள்ளதோடு, அவரது நுரையீரல் வரை அது பரவிவிட்டதாக கூறிவிட்டார்கள்.

அதற்கு மருந்து எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், Nikki இன்னும் 12 மாதங்கள்தான் உயிர் வாழ்வார் என்றும் கூறிவிட்டார்கள்.

கோமோதெரபி சிகிச்சைக்கு உட்பட்டுவரும் Nikki, கொஞ்சம் காலம் கூட வாழலாம் என்ற ஆசையில் தனியார் சிகிச்சை ஏதாவது கிடைக்குமா என்று தேடி வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்