நேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

போரிஸ் ஜான்சன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலைத் தவிர்ப்பதற்காக, குளிரூட்டி வாகனத்திற்குள் சென்று மறைந்துள்ளார்.

பிரித்தானியாவில் நாளைய தினம் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது. கட்சியினர் அனைவரும் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யார்க்ஷயரில் டோரி வசம் உள்ள புட்ஸே தொகுதியில் 'மாடர்ன் மில்க்மேன்' என்ற வணிகத்திற்கு போரிஸ் ஜான்சன் விஜயம் மேற்கொண்ட போது, பத்திரிக்கையாளர் Jonathan Swain அவரிடம், “காலை வணக்கம் பிரதமர், நீங்கள் குட் மார்னிங் பிரிட்டனில் வருவீர்களா?” என கேள்வியெழுப்பினார்.

ஆனால் அதற்கு பதிலளிக்காமல் போரிஸ் ஜான்சன் வேகமாக குளிரூட்டி வாகனத்திற்குள் சென்றுவிட்டார்.

அதேசமயம் அவருடைய உதவியாளர் கெட்டவார்த்தையால் பத்திரிகையாளரை திட்டிவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத நேரலையில் இருந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான பியர்ஸ் மோர்கன் மற்றும் சுசன்னா ரீட் ஆகியோர் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

அடுத்த சில நிமிடங்ளில் ஆரஞ்சுப்பழச்சாற்றுடன் வெளியில் வந்த ஜான்சன், நிகழ்ச்சியில் தோன்றுவதற்கான உறுதிமொழியைக் கடைபிடிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, 'நிச்சயமாக நான் செய்வேன்' என்று பதிலளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்