பிரித்தானியாவில் தேர்தல் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு? சுற்றி வளைத்த நிபுணர்களால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் இன்று அதிகாலை ஒரு வாக்குச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து வடக்கு லானர்க்ஷையரின் மதர்வெல்லில் உள்ள க்ளென் டவர் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிகாலை 1 மணியளவில் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் அந்த கட்டிடம் சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த மர்ம பொருளை நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர்.

பரபரப்பன சூழலில் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வாக்குச்சாவடி ஒன்றில் மர்ம பொருள் கிச்சியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வெடிகுண்டு நிபுணர்கள் மிகவும் சாமர்த்தியமாக குறித்த வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், வாக்குச்சாவடியில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும், மாற்று வாக்குச்சாவடியை பயன்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்