தேர்தலில் வாக்களிக்காத பிரித்தானிய அரச குடும்பம்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய பொதுத் தேர்தலில் ராணியார் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் வாக்களிக்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் மிகவும் முக்கியமான சூழலில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலிலும் வழக்கம் போல சிலபேர் வாக்களிப்பதை புறக்கணித்து அல்லது வாக்களிக்க செல்லாமல் உள்ளனர்.

அவர்களில் முக்கியமானவர்கள் பிரித்தானிய அரச குடும்பம். ராணியார் தொடங்கி கேட் மிடில்டன் வரை தேர்தலில் வாக்களிக்கவில்லை.

பொதுவாக வாக்குச்சீட்டில் எக்ஸ் குறியை பதிய அரச குடும்பத்திற்கு அஞுமதி இல்லை என கூறப்பட்டது, ஆனால் உண்மையில் அதுவல்ல காரணம் என தெரியவந்துள்ளது.

ராணியாருக்கு வாக்களிக்கும் அனுமதி உள்ளது. அவரும் பொதுமக்கள் போன்று அல்லது சிறப்பு அனுமதியுடன் வாக்களிக்கலாம்.

(Image: Getty Images)

ஆனால் அரச பாரம்பரியம் அவரை தனிப்பட்ட எவருக்கும் வாக்களிக்காமல் பொதுவானவாராக கருதுகிறது.

இது முதல் உலகப் போருக்கு பின்னர் இருந்தே கடைப்பிடிக்கப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ராணியார் வாக்களிக்கவில்லை என்றாலும், பிரித்தானியாவில் எவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் ராணியாரிடமே ஆட்சி அமைக்க அனுமதி கோருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்