பிரித்தானியா தேர்தல்... ஆசையாக வாக்களிக்க வந்தவர்களை அனுமதி மறுத்த அதிகாரிகள்!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், அதில் சிலர் வாக்களிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் இன்று காலை 10 மணிக்கு பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. இதற்காக மக்கள் அதிகாலையில் இருந்தே காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

(Picture: Aidan Conway)

இந்த தேர்தல் குறித்த தலைமுறையினருக்கு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானியர்கள் சிலர் வாக்களிப்பதற்காக பதிவு செய்திருந்த போதிலும், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை என்று வேதனையுடன் திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Picture: Liverpoool Echo)

இது குறித்து Ellis Bennett என்ற 18 வயது நபர் கூறுகையில், இது எனக்கு முதல் தேர்தல், நான் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய வாக்களிப்பதற்கு தகுதியானவை பதிவு செய்தேன்.

இதனால் மிகவும் ஆர்வமுடன் இன்று காலை நான் Liverpool-ல் இருக்கும் வாக்குசாவடிக்கு சென்ற போது, அங்கிருக்கும் வாக்களர்கள் பெயரில் என்னுடைய பெயர் இல்லை என்று அதிகாரிகள் என்னை அனுப்பி விட்டனர். நான் பதிவு செய்தேன், எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

ஆனால் என்னுடைய பெயர் வாக்கள்ர்களின் பட்டியலில் இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் வாக்களிப்பதற்கு பதிவு செய்த போதும் எனக்கு பதிவு செய்ததற்கான கார்டு வராமல் இருந்த நிலையில், அது ஏதோ ஒரு பிழை என்று நினைத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

(Picture: MEN Media)

இதே போன்று Susan Riley மற்றும் அவளுடைய மகள் Samantha இருவரும், Bury-யின் வடக்கு பகுதியில் இருக்கும் St Peter’s Primary பள்ளிக்கு வாக்களிக்க சென்ற போது, அங்கு அவர்கள் வாக்களிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இதே போன்று வாக்களர்களின் பட்டியலில் பெயர் இல்லை என்றே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இவர்கள் குடும்பத்தினர் கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் திகதி வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் Samantha-வின் தந்தையின் பெயர் மட்டும் வாக்களர்களின் பட்டியலில் இருந்ததாக கூறியுள்ளனர்.

இது குறித்து Liverpool Council அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், வாக்களர் பதிவு தொடர்பான எந்த பிரச்சனையும் எங்களுக்கு தெரியாது, நவம்பர் 26-ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மக்கள் வாக்களிக்க பதிவு செய்திருந்தால், அவர்கள் இன்று வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்