பிரித்தானியா தேர்தலை துல்லியமாக கணித்த 2017-ஆம் ஆண்டு...மகிழ்ச்சியில் உச்சியில் கன்சர்வெடிவ் கட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் வெளியான கருத்து கணிப்பில் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 2017 கருத்து கணிப்பு எப்படி இருந்தது? எப்படி இந்த கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை அடுத்த சில நிமிடங்களிலே துவங்கிவிட்டது. முதல் முடிவு இரவு 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வெளியாகும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.

இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வெடிவ் கட்சி அதிகம் பெரும்பானையுடன் வெற்றி பெறும் என்று குறிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளர்.

இந்த கருத்துகணிப்பு எப்படி நடத்தப்படுகிறது?

ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டைப் பதிவு செய்த பின்னர் நடத்தப்படும் ஒரு கருத்து கணிப்பு ஆகும். இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 144 தொகுதிகளை உள்ளடக்கியது. ஆனால் வடக்கு அயர்லாந்தில் பல்வேறு கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதால், இது கருத்துகணிப்பில் சேர்க்கப்டமாட்டது.

அதே சமயம் வாக்களித்து வரும் வாக்காளர்களிடம் ஒரு குறிப்பிட்ட சீட்டை கொடுத்து அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும் எனவும், அதன் பின் அதன் முடிவு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சிகளுக்கு இருக்கும் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் இதன் முடிவுகள் லண்டனில் உள்ள ரகசிய இடத்தில் நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

கடந்த 2017-ஆம் ஆண்டு கருத்து கணிப்பு?

கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது கணிக்கப்பட்ட கருத்துகணிப்பு துல்லியமாகவே இருந்தது என்று கூறலாம், ஏனெனில் டோரிகள் 314 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது, அதை விட 4 இடங்கள் அதிகமாக வென்றது.

அதே சமயம் தொழிலாளர் கட்சி 266 இடங்கள் என்று கூறப்பட்டது, ஆனால் 4 இடங்கள் குறைந்து 262 இடங்கள் எனவும் குறிக்கப்பட்டது. இதனால் இந்த கருத்துகணிப்பு கிட்டத்தட்ட சரியாகவே இருக்கும், பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கப்போவது போரிஸ் ஜான்சன் என்றே கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...