பிரித்தானியா தேர்தலில் மிக முக்கிய வேட்பாளர்கள் சந்தித்த தோல்வி... வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா தேர்தலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய புள்ளிகள் தோல்வியடைந்த நிலையில், அவர்களின் வாக்குவித்தியாசங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலர் தோல்வியடைந்தனர். அவர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர் என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

Jo Swinson(லிபரல் கட்சி )

லிபரல் கட்சியின் தலைவரான Jo Swinson 149 ஓட்டடுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர் டன்பார்டன்ஷைர் கிழக்கில் போட்டியிட்டார். இதில் ஸ்காடிஷ் நேஷனல் கட்சி வேட்பாளர் ஏமி காலஹன் 19,672 வாக்குள் பெற்றார். Jo Swinson 19, 523 வாக்குகள் பெற்றார்.

(Picture: PA)

இதன் மூலம் 149 வாக்குகள் வித்தியாசத்தில் ஏமி காலஹன் வெற்றி பெற்றார். இந்த தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத Jo Swinson உணர்ச்சிவசப்பட்ட ஸ்வின்சன் தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

Zac Goldsmith(கன்சர்வெடிவ் கட்சி)
(Picture: PA)

லண்டன் முன்னாள் மேயரான இவர் Richmond Park-ல் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட லிபரல் கட்சியை சேர்ந்த Sarah Olney 34,559 வாக்குகளை பெற்றார். Richmond Park 26,793 வாக்குகளை பெற்றதால், இவர் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.

Laura Pidcock(தொழிலாளர் கட்சி)

Durham North West-ன் முன்னாள் எம்.பியான இவர் கன்சர்வெடிவ் கட்சியின் வேட்பாளர் Richard Holden-யிடம் 1,144 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் Laura Pidcock 18,846 வாக்குகளையும், 19,990 வாக்குகளும் பெற்றார்.

(Picture: Rex)

கடந்த 1950-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் Durham North West பகுதியில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

Dennis Skinner(தொழிலாளர் கட்சி)
(Picture: Getty)

பிரித்தானியா பாராளுமன்றத்தில் அதிக முறை எம்.பியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் Dennis Skinner. 87 வயதான இவர் கன்சர்வெடிவ் கட்சியிடம் 5,299 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.

Chuka Umunna(லிபரல் கட்சி)

தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்.பியான இவர், அதன் பின் லிபரல் கட்சியில் இணைந்து லண்டன் மற்றும் Westminster-ல் போட்டியிட்டு வெற்றி பெற தவறிவிட்டார்.

(Picture: Getty)

இவர் இதற்கு முன்பு தான் போட்டியிட்ட Streatham-ல் இருந்து விலகி வந்து குறித்த இடங்களில் போட்டியிட்டார். ஆனால் கன்சர்வெடிவ் கட்சியை சேர்ந்த Nickie Aiken 3,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த் தோல்விக்கு பின் பேசிய Chuka Umunna, கடந்த 10 ஆண்டுகள் நான் பிறந்த தொகுதியான ஸ்ட்ரீதாமுக்கு பாராளுமன்றத்தில் பணியாற்றுவது எனது வாழ்க்கையின் பாக்கியம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்