பிரித்தானியா தேர்தலில் வேறொரு கட்சிக்கு வாக்களித்த கணவன்: உண்மை தெரிந்த மனைவியின் அதிர்ச்சி பதிவு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா தேர்தலில் கணவர் கன்சர்வெடிவ் கட்சிக்கு வாக்களித்ததால், மனைவி இது தான் நாம் பிரிய சரியான நேரம் என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வெடிவ் கட்சி வரலாற்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த மனைவி ஒருவர், இந்த தேர்தலில் கணவன் தனக்கு பிடிக்காத கட்சிக்கு வாக்களித்ததால், அவரை பிரிய முடிவு செய்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், அவர்களின் பெயர் மற்றும் முகவரி பற்றி குறிப்பிடாமல், பிரித்தானியாவை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கடந்த காலங்கள் ஒரே விதமான அரசியல் எண்ணங்களையும், ஒரே கட்சிக்கு தான் தங்கள் ஆதரவை அளித்து வந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது நடந்து முடிந்த தேர்தலி, கணவன் கன்சர்வெடிவ் கட்சிக்கு வாக்களித்ததாகவும், பொளாதார நிலையை கருத்தில் கொண்டு வாக்களித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கோபமான மனைவி, போரிஸ் ஜான்சனின் ஆட்சியில் தான் குழந்த வறுமை போன்றவை நடந்தது. அதுமட்டுமின்றி பிரக்சிட் வெற்றிகரமாக முடிந்ததால், இது இன்னும் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துமே என்ற அச்சத்தில் நான் இருக்கும் போது, அவர் இப்படி செய்திருப்பது வேதனையாக உள்ளது.

இது தான் நாம் பிரிய சரியான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் மனைவியையே திட்டி வருகின்றனர். ஏனெனில் இது அவரின் விருப்பம், நீங்கள் இன்னும் சிறிய குழந்தை இல்லை, வாழ்க்கையை தெரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டுமே மனைவிக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர். தற்போது அவரின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக 400-க்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்