புறப்பட தயாரான விமானம்... உதவியாளரின் பார்வையில் பட்ட அந்த சம்பவம்: கதிகலங்கிய நொடி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் புறப்பட தயாரான பயணிகள் விமானமானது பனி மூடிய நிலையில் இருந்ததால், விமான நிலைய ஊழியரின் எச்சரிக்கையை அடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ளூர் விமான சேவை விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்துள்ளது.

அந்த விமானத்தின் இறக்கை ஒன்றில் அடுக்கான பனி மூடி இருந்துள்ளது. பயணிகள் அனைவரும் உள்ளே நுழைந்த பின்னர் கதவுகளையும் மூடியுள்ளனர்.

விமானியும் புறப்படும் முன்னர் பயணிகளுக்கு அளிக்கும் அறிவிப்பையும் முடித்துள்ளார். ஆனால் இறக்கையில் பனி மூடியிருப்பதையும், அதை களைந்த பின்னரே விமானம் புறப்படும் என விமானி அறிவிப்பார் என, அந்த பனி அடுக்கை கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் எண்ணியிருந்துள்ளார்.

இந்த தகவலை அவர் விமானியிடம் தெரிவிக்கவும் அஞ்சியுள்ளார். காரணம் அது தமது வேலை அல்ல என விமானி குறிப்பிட்டால், அது தமக்கு அவமானமாகிவிடும் என்ற காரணத்தாலையே.

அனுபவம் மிகுந்த விமானியால் உடனடியாக அதுபோன்ற பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என தெரியும் என்பதாலும், தாம் சில நிமிடங்கள் மவுனம் காத்ததாக அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட தயாராகியுள்ளது. இனிமேல் விமானி எந்த காரணத்தாலும் அந்த பனி அடுக்கை களைய முயலமாட்டார் என உறுதியானதும்,

உடனடியாக விமான ஊரியர்களுக்கான ஒரு அதிகாரியிடம் தாம் பார்த்தவற்றை விளக்கியுள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், விமானத்தின் இறக்கையில் படர்ந்திருந்த பனியை உறுதி செய்துள்ளனர்.

மட்டுமின்றி அதை அந்த விமானிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பனியை களையும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் பனிப் பொழிவு அதிகமாக இருந்ததால் மீண்டும் மீண்டும் விமானத்தில் பனி படர்ந்த நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த விமானத்தை ரத்து செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த விமான நிலைய ஊழியர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பல பயணிகளின் உயிரை காப்பாற்றிய அந்த ஊழியரை அழைத்து குறித்த விமானியும் தனிப்பட்ட முறையில் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்