பிரித்தானியா சாலையில் அங்கும் இங்கும் அலைந்த மர்ம சிறுவன்... பொலிஸிடம் கூறிய இதயத்தை உருக வைக்கும் கதை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் எம்6 சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மத்திய மத்திய மோட்டார்வே பொலிஸ் குழு வெளியிட்ட தகவலில், கடந்த புதன்கிழமை இரவு பர்மிங்காம் அருகே மோட்டார் பாதையில் மர்ம சிறுவன் சுற்றி திரிவது குறித்த எங்களுக்கு புகார் வந்தது.

உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டோம், அப்போது, அவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைந்தவர் என தெரியவந்தது.

அவர் சில தினங்களுக்கு பெற்றோரிடமிருந்து தொலைந்துள்ளார், எங்கே இருக்கிறார் என்பது கூட அவருக்கு தெரியவில்லை, ஆங்கிலமும் அவரால் பேச முடியவில்லை எனவே பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறோம்.

எங்கே இருக்கிறார் என்று தெரியாமல், பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல், மொழி பேச முடியாமல் அவர் எவ்வளவு பயப்படுவார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

'சமூக சேவையாளர்கள் வந்து அவரைக் கவனித்துக்கொள்ளும் வரை நாங்கள் அவரை உணவு மற்றும் தண்ணீருடன் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...