பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு !

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெள்ளியன்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

வெள்ளியன்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் ஒப்பந்தம் மீது புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அனைவரும் வாக்களிக்க உள்ளனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சன், அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிட் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தார்.ஜான்சன் செய்துள்ள அந்த ஒப்பந்தத்தை The withdrawal bill என்று அழைக்கப்படும் மசோதா அமுல்படுத்தும்.

இந்த விடயம் நேற்று உரையாற்றிய மகாராணியாரின் உரையில் அறிமுகம் செய்யப்பட்டு,பிரெக்சிட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற செய்தியை வெளிப்படையாக அறிவித்தது. தற்போது, அந்த ஒப்பந்தம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பிரித்தானிய பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 80 இருக்கை பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், இந்த பிரெக்சிட் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஜனவரி மாதம் 31ஆம் திகதி வெளியேறுவதைக் குறித்த பிரதமரின் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதைக் காட்டுவதற்காக அவர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இதற்கிடையில், மசோதாவை எதிர்ப்போர், இந்த மசோதா பிரித்தானியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், transition period முடியும் நேரத்தில் சரியாக ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என அரசு தொடர்ந்து கூறிவருகிறது.Withdrawal Agreement மசோதாவை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கும் நடைமுறை புதிய ஆண்டிலும் தொடரும் என்றாலும், வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பின் நோக்கம் ஜனவரி 31 அன்று பிரெக்சிட் நிறைவேற்றப்படுவதை நோக்கி அரசு முன்னேறுகிறது என்பதைகாட்டுவதற்காகும்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers