பாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி! நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

அயர்லாந்தில் சிறுமி ஒருவர் பாலத்தின் மேலே இருந்து கீழே குதிக்கவிருந்த நிலையில், லாரி டிரைவர் ஹீரோ போன்று செயல்பட்டு அவரை காப்பாற்றிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அயர்லாந்தின் Dublin அருகே உள்ள N7 trunk சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கிருக்கும் பாலத்தில் நுனி பகுதிக்கு வந்த சிறுமி ஒருவர் கீழே குதிப்பது போன்று இருந்துள்ளார்.

இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவர் கீழே குதித்துவிடுவாரோ என்ற அச்சத்திலே சென்றனர். அப்போது ஒரு லாரி டிரைவர் அந்த சிறுமி இருக்கும் இடத்திற்கு நேராக லாரியை நிறுத்திவிட்டு, உடனே குறித்து சிறுமியை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

(Image: Keith Dunne)

இந்த காட்சியை அங்கிருந்த புகைப்படகலைஞர் கெய்த் டுன்னே எடுத்துள்ளார். அப்போது அவர் அந்த சிறுமி குதிப்பதற்கு தயாராக இருந்த போது, திடீரென்று ஒரு லொரி அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.

ஹீரோக்கள் அனைவரும் தொப்பிகள் அணிந்திருப்பது இல்லை என்று கேள்விபட்டிருப்போம், அதை அன்று பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்