இந்திய உணவகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்... உள்ளே பாய்ந்த கார்: பிரித்தானியாவில் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் இந்திய உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்த நிலையில், கார் ஒன்று அசுர வேகத்தில் உள்ளே பாய்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.

ஆண்டின் கடைசி இரவு உணவை அருந்திக் கொண்டிருந்த மக்கள் இந்த சம்பவத்தால் பீதியில் அலறியதுடன் சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

கிழக்கு சசெக்சின் லூவிஸில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள இந்தியருக்கு சொந்தமான Chaula உணவகத்தில்லேயே இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் மூவர் லேசான காயங்களுடன் தப்பியதாக சசெக்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு மற்றும் அவசர உதவிக் குழுவினர், உணவகத்தில் இருந்து காரை உடனடியாக அப்புறப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

மிகவும் அமைதியாக வாடிக்கையாளர்கள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தனர், ஆனால் திடீரென்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நல்ல வேளை யாருக்கும் உயிரபாயம் இல்லை என அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்