புத்தாண்டில் வருங்கால மனைவியை மகிழ்விக்க நினைத்து உயிரை பறிகொடுத்த நபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, முகத்தின் மேல் பட்டாசு வெடித்து சிதறியதில் வருங்கால மனைவியின் கண்முன்னே பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த கேரி மெக்லாரன் (50) என்பவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வருங்கால மனைவி ஜாஸ்மின் மற்றும் அவருடைய நண்பர்களுடன் நேற்று இரவு தாய்லாந்தில் புத்தாண்டு தினத்தை கொண்டாடியுள்ளார்.

அப்போது ஜாஸ்மினை மகிழ்விக்க நினைத்த அவர், ஒரு பெரிய பட்டாசை பற்ற வைத்துள்ளார். முதல் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, மீண்டும் பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.

அப்போது முகத்தின் மேல் திடீரென பட்டாசு வெடித்து சிதறியதில், சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் சுருண்டு விழுந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நீண்ட நேரம் போராடியும் பலனளிக்கவில்லை. புத்தாண்டு தினத்தன்று இறந்த காதலனை அவருடைய காதலி கட்டியணைத்தபடியே கதறி அழுதுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்