ஈரான் சிறையிலிருக்கும் பிரித்தானியரின் மனைவி: ஈரான் தளபதி கொலையால் என்ன ஆகுமோ என அச்சம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஈரான் அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மனைவியின் நிலைமை, ஈரான் தளபதி கொலையால் என்ன ஆகுமோ தெரியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளார் பிரித்தானியர் ஒருவர்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Nazanin Zaghari-Ratcliffe, ஈரானிலிருக்கும் தனது உறவினர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு, உளவு பார்த்ததாகவும், ஈரான் அரசைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த அவரது விண்ணப்பம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரான் தளபதி சுலைமானி அமெரிக்க வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

bbc

ஈரானிலிருக்கும் மேற்கத்திய நாட்டவர்கள் வெளியேற வேண்டும் என பல பக்கங்களிலிருந்தும் பலத்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தனது மனைவியின் நிலைமை என்ன ஆகுமோ என Nazaninஇன் கணவரான Ratcliffe அச்சம் தெரிவித்துள்ளார்.

சுலைமானி கொல்லப்பட்டதால் அதிகரித்துள்ள பதற்றம் தன் மனைவியின் பிரச்சனையை மோசமாக்கலாம் என அஞ்சுகிறார் அவர்.

அதனால், தனது மனைவியின் நிலை குறித்து பேசுவதற்காக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திக்க திட்டமிட்டுள்ளார் அவர்.

bbc
AFP PHOTO / FREE NAZANIN CAMPAIGN
onenewspage

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...