மத்திய கிழக்கில் போர்... குவாசிமை அமெரிக்கா கொன்றது சரியா? பிரித்தானியா அதிரடி கருத்து

Report Print Basu in பிரித்தானியா

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது சட்டபூர்வமானதா என்பது குறித்து பிரித்தானியா வெளியுறவு அமைச்சர் ராப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு என்று கூறிய ராப், குவாசிம் படுகொலையை நியாயப்படுத்தியுள்ளார்.

ஈரானிய இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானியை ஒரு ‘பிராந்திய அச்சுறுத்தல்’ என்று வர்ணித்த ராப், மத்திய கிழக்கில் போர் என்பது யாருடைய நலன்களுக்கும் பொருந்தாது என்றும் கூறினார்.

மேலும், தற்போதைய நிலைமைக்கு அனுதாபம் தெரிவிப்பதாகக் கூறிய ராப், ஈரானின் வெளியுறவு அமைச்சருடன் பேசவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களை குறைக்க வேண்டும் என ஈராக்கின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச பதற்றத்தில் இருந்து ஈரான் வர அனுமதிக்கும் ஒரு பாதை உள்ளது. ஈரானின் தீங்கு விளைவிக்கும் செயல்களை நாம் கொண்டிருக்க வேண்டும், ஆனால், பதற்றத்தை தனித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பில் வியாழக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவையும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்