பட்டங்களை துறந்து கனடாவுக்கு குடிபெயரும் பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் தங்கள் பட்டங்களைத் துறந்துவிட்டு கனடாவுக்கு குடிபெயர இருப்பதாக தம்பதியரின் நண்பர்கள் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் தங்கள் விடுமுறை நாட்களை கனடாவில் செலவிட்டார்கள்.

இந்நிலையில், அவர்களது நண்பர்கள் சிலர், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தில் ஓரம்கட்டப்படுவதாகவும், அதனால் 'His Royal Highness' மற்றும் 'Her Royal Highness' என்னும் பட்டங்களைத் துறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் அவர்கள் இருவரும் கனடாவுக்கே குடிபெயர்ந்து அங்கிருந்தே தங்கள் தொண்டு நிறுவனங்களை நடத்த இருப்பதாகவும், இது குறித்து மூத்த குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக அரண்மனை வட்டாரத்தை விசாரித்தபோது, இவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றும் அதனால் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...