இனி ஈரானிலிருக்கும் என் உறவினர்களை பார்ப்பேனா என்று தெரியவில்லை: பிரித்தானிய ஈரானிய இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் தொடரும் நிலையில், ஈரானிலிருக்கும் தங்கள் உறவினர்களைக் குறித்து பிரித்தானிய ஈரானியர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் வாழும் Kim (27) ஒரு பிரித்தானிய ஈரானியர்.

அவரது பெற்றோர் தங்கள் இருபது வயதுகளில் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். என்றாலும் Kimஇன் உறவினர்கள் ஏராளமானோர் ஈரானில் தான் வாழ்கிறார்கள்.

ஈரான் தளபதி சுலைமான் கொல்லப்பட்டதையடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தொடரும் பதற்றம் அவரை கவலையடையச் செய்துள்ளது.

தங்கள் தாய் நாடாக கருதும் ஈரானில் என்ன நடக்கிறது என்ற கவலை அவரை வாட்டுகிறது. என் நாடு என மனதுக்கு மிகவும் நெருக்கமான நாடு, எனது குடும்பத்துக்கு என்ன ஆனதோ என்ற கவலை என்னை வாட்டுகிறது.

KIM

இனி எனது தாத்தா பாட்டியை பார்ப்பேனா என்று எனக்கு தெரியவில்லை.

நாங்கள் எல்லோருமே அவர்களைக் குறித்து கவலையடைந்திருக்கிறோம், அவர்களுடைய பாதுகாப்பு, அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை எங்களை வாட்டுகிறது என்கிறார் Kim.

இப்போதைக்கு பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட யாருமே ஈரானுக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்றே எண்ணுகிறேன் என்கிறார் அவர். பிரித்தானியாவில் வாழும் பலரின் கருத்தும் இதுபோலத்தான் உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers