ஹரி - மேகன் முடிவால் பரபரப்பில் அரண்மனை.... அரச குடும்பத்திற்கு ராணி அதிரடி உத்தரவு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக ஹரி - மேகன் அறிவித்ததை தொடர்ந்து, சாத்தியமான தீர்வுகளை விரைந்து கண்டறியுமாறு ராணி அரச குடும்பத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அரச குடும்ப பணிகளில் இருந்து விலகுவதாக ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் நேற்று அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர்.

பிரித்தானியா மற்றும் வட அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரிக்கும் நிதி ரீதியாக, சுயாதீனமான அரச குடும்பத்தினராக மாற விரும்புவதாக அவர்கள் கூறினர்.

இருவரின் இத்தகைய பகிரங்கமான முடிவால், ராணியும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் பெரும் வேதனையடைந்திருப்பதாக கூறப்பட்டது. விவாதங்கள் இன்னும் ஒரு ‘ஆரம்ப கட்டத்தில்’ இருப்பதாக நேற்றிரவு அரண்மனை சார்பில் அறிக்கை வெளியானது.

அரச குடும்பத்தில் இருந்து செல்ல வேண்டாம் என்ற ராணியின் அறிவுறுத்தல்களை அவர்கள் பகிரங்கமாக புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அரச குடும்பம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதற்காக ‘வாரங்கள் அல்ல சில நாட்களுக்குள்’ சாத்தியமான தீர்வுகளை கண்டுபிடிக்க நான்கு அரச குடும்பங்களுக்கும் ராணி உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய அதிர்ச்சி அறிவிப்புக்குப் பிறகு தம்பதியினரின் புதிய சூழ்நிலையைத் தீர்ப்பதற்கு அரச குடும்பம் ‘வேகத்தில்’ செயல்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...