ஈரானில் தொடரும் பதற்றம்! பிரித்தானிய மக்களுக்கு அந்நாடு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
201Shares

பிரித்தானியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பகை அதிகரித்து கொண்டே வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவும் நிலையில் அதை தடுக்கவும், சமாதானம் மேற்கொள்ளவும் உலகநாடுகள் பல நடவடிக்கை எடுக்கின்றன.

அதே நேரத்தில் ஈரானில் நிலைமை சரியில்லை என்பதால் அங்கு தற்போது செல்வது சரியாக இருக்காது என்றே பலரும் கருதுகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழலில் பிரித்தானியா தங்கள் நாட்டு குடிமக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், பிரித்தானிய குடிமக்கள் யாரும் ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் நிலைமை சரியில்லாமல் உள்ளதால் பிரித்தானிய மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்