பிரித்தானிய அரச குடும்ப காட்சியக பகுதியில் இருந்து ஹரி, மேகன் சிலை அகற்றம்!

Report Print Abisha in பிரித்தானியா

லண்டனில் அமைந்துள்ள கட்சியகத்தில் பிரித்தானியவின் அரச குடும்ப பகுதியில் இருந்து ஹரி மேகன் தம்பதியின் சிலை அகற்றப்பட்டுள்ளது.

லண்டனில், அமைந்துள்ள Madame Tussauds என்ற அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தினர் மெழுகு சிலை இடம் பெற்றுள்ளது.

அதில் ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், இரவரசர் சார்லஸ் அவரது மனைவி காமிலா, இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் ஆகியோர் சிலைகளுடன் இளவரசர் ஹரி மேகன் சிலையும் இடம் பிடித்திருந்தது.

இந்நிலையில், ஹரி மேகன் தம்பத்தியினர், அரச குடும்பத்தின் மூத்த நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து தங்களை விலக்கி கொள்வதாகவும், தென் அமெரிக்காவில் சென்று குடியேற இருப்பதாகவும், பொருளாதார நிர்வாகத்தில் தனித்து செயல்பட விரும்புவதாகவும் அறிவித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, ராணியின் அறிவுரையின்றி எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.

அரச குடும்பதிலிருந்து வெளியாக இந்த தகவலுக்கு நாங்களும் இந்த வகையில், எதிர்வினை செய்துள்ளோம் என்று Madame Tussauds London மேலாளர் ஸ்டீவ் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி அவர்கள் அரச குடும்பத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிடபட மாட்டார்கள். அவர்கள், எப்போது பிரபலமான இருவர் என்று கணக்கிடப்படுவர், எதிர்காலத்தில் அவர்கள் தங்கள் முடிவை மாற்றுவது பொறுத்து அமையும் என்றும் அவர் சுட்டுக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்