18-வது பிறந்தநாள்... தாயாரிடம் ஆசி பெற விரும்பிய பிரித்தானிய இளைஞன்: உக்ரேன் விமான விபத்தில் சிக்கி பலி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
281Shares

மேற்கு லண்டன் பகுதியில் குடியிருந்து வந்த பிரித்தானிய இளைஞனும் ஈரானிய விமான விபத்தில் பலியானதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடுத்த ஏவுகணை தாக்குதல் சம்பவத்திற்கு இடையே உக்ரேன் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது.

இதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 176 பேர் உடல் கருகி பலியானார்கள்.

இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், அவர்கள் தொடர்பில் பின்னணி தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளது.

அந்தவகையில், மேற்கு லண்டனில் குடியிருந்து வந்த 17 வயது மாணவன் ஆராத் ஸரேய் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 176 பயணிகளுடன் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தில் ஆராத் ஸரேயும் பயணம் செய்துள்ளார்.

விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் தமது தாயாரை சந்திக்கும் பொருட்டும், 18-வது பிறந்தநாளுக்காக ஆசி பெறவும் ஈரானின் ஷிராஸ் நகரில் இருந்து ஆராத் புறப்பட்டுள்ளார்.

2018 கோடை கால துவக்கத்தில் இருந்தே ஆராத் ஸரேய் தமது தாயாரை நேரில் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக உக்ரேன் விமானத்தில் பயணப்பட்ட அந்த இளைஞரும் கடைசியாக ஒருமுறை தாயாரை நேரில் பார்க்க முடியாமலே மரணமடைந்துள்ளார்.

கனடாவில் தந்தையுடன் ஸரேய் குடியிருந்து வந்தாலும், மாணவப் பருவம் முழுவதும் பிரித்தானியாவில் செலவிட்ட அவர் அதிக நட்பு வட்டம் கொண்டவர் எனவும், தமது 18-வது பிறந்தநாளை பிரித்தானியாவில் தாயார் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட ஆவலாக இருந்ததாகவும் நண்பர்கள் பலர் கண்கலங்கியபடி தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்