ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா? என்ன நடந்தது? பிரித்தானியாவுக்கான ஈரான் தூதர் விளக்கம்

Report Print Santhan in பிரித்தானியா

ஈரானில் விமான விபத்து நடந்த நேரத்தின் போது, அந்த பகுதியில் எந்த ஒரு ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று பிரித்தானியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை, ஈரானில் உக்ரேன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது, இந்த விபத்தில் 176 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விமான விபத்திற்கு முக்கிய காரணம் ஈரான் தான், எனவும் ஈரான் தெரியாமல் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரித்தானியாவுக்கான ஈரான் தூதர் Hamid Baeidinejad-விடம் பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் இந்த விமான விபத்து குறித்து பேட்டி எடுத்துள்ளது.

அதில், பல ஊடகங்களில் குறித்த விமானத்தை ஈரானின் ஏவுகணை தான் தாக்குயுள்ளது போன்ற வீடியோ வெளியாகியுள்ளதே, அந்த வீடியோவும் விமான விபத்து நடந்த அன்று தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதோ ஒரு பொருள் தாக்குவது போன்று, கீழே எரிந்த நிலையில் விழுவது போன்றும் உள்ளதே, இந்த வீடியோவை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டகப்பட்டது.

அதற்கு Hamid Baeidinejad,நிறைய வீடியோக்கள் வருகின்றன. அதன் உண்மை தன்மையை அதிகாரிகள் ஆராய்ந்த பின்னரே உண்மை தெரிய வரும், அதுமட்டுமின்றி விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றால், விமானத்தின் கருப்பு பெட்டியில் தான் தெரியும்.

கருப்பு பெட்டியில் இருக்கும் தகவலை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை சொல்ல முடியும், அதுமட்டுமின்றி விமான விபத்து நடந்த இடத்தின் நிலத்தில் கிடைக்கும் சில ஆதாரங்களை வைத்து கூற முடியும் என்று கூற, உடனே விமான விபத்து நடந்த இடத்தில் ஆதாரங்களை அழிப்பதற்காக கனரக வாகனமான புல்ட்ரோஷர் ஏன் பயன்படுத்தீனர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இது ஒரு நியாயமற்ற குற்றச்சாட்டு, வேண்டும் என்றே யாரும் இப்படி செய்யமாட்டார்கள், உண்மையில் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் எப்படி இந்த விபத்து ஏற்பட்டது என்பது யாருக்குமே தெரியாது.

அதற்கு தான் கருப்பு பெட்டி, கருப்பு பெட்டி தான் இந்த விபத்தின் முக்கிய தடயம், அதை அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்ததால் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் விமான விபத்து நடந்த அன்று, அந்த நேரத்தில் அந்த பகுதியில் ஈரான் எந்த ஒரு ஏவுகணை தாக்குதலும் நடத்தவில்லை, உறுதியாக ஈரான் இராணுவம் இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்