இந்திய வம்சாவளி பொலிஸாருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் மீது பொய்யாக குற்றம் இந்திய வம்சாவளி பொலிஸாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் பொலிஸாராக பணிபுரிந்து வரும் இந்திய வம்சாவளி நபரான ஹிடேஷ் லக்கானி (42), கடந்த 2018ம் ஆண்டு பொலிஸாருக்கு போன் செய்து அதிர்ச்சி செய்தி ஒன்றினை கூறியுள்ளார்.

மர்ம நபர் ஒருவர் 5 வயது சிறுமியை முட்புதருக்குள் தூக்கி சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயன்றதாகவும், அதனை தடுத்து காப்பற்றியதாகவும் கூறினார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஹிடேஷ் லக்கானியிடம் விசாரணை மேற்கொண்டு அவர் செல்போனில் படம்பிடித்த நபரின் புகைப்படத்தை வாங்கி சென்றனர்.

இதனையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பொலிஸார், கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஹிடேஷ் லக்கானி கூறியது போல் அங்கு சிறுமி கடத்தப்பட்டதாக எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை.

இதனால் பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளபட்ட தீவிர விசாரணையில், சம்பவத்தன்று தெரு துப்புரவாளராக பணிபுரிந்து வரும் நபர், ஹிடேஷ் லக்கானியின் தோட்டப்பகுதியை சுத்தம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு பழிவாங்கும் விதமாகவே ஹிடேஷ் லக்கானி பொய்யாக புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிமன்றம், ஹிடேஷ் லக்கானிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...