ஏலியன்ஸ் பூமியில் இருக்கிறார்கள்! ஏன் அவர்களைப் பார்க்க முடியாது? பிரித்தானிய பெண் சொன்ன முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

ஏலியன்ஸ் இருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பிரித்தானியா விண்வெளி வீராங்கனை பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

ஏலியன்ஸ் இருக்கிறார்கள், அவர்கள் பூமியில் நம்மிடையே இருக்கக்கூடும் என விண்வெளிக்குச் சென்ற முதல் பிரித்தானியர் டாக்டர் ஹெலன் ஷர்மன் கூறியுள்ளார்.

இப்போது லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் வேதியியலாளராக பணிபுரியும் ஷர்மன், மே 1991-ல் சோவியத் விண்வெளி நிலையமான மிர்-க்கு சென்று வரலாறு படைத்தார்.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷர்மன், ஏலியன்ஸ் இருக்கிறாரகள், அதில் மாறுப்பட்ட கருத்தே இல்லை. பிரபஞ்சத்தில் எங்காவது இருக்க வேண்டும்..

பில்லியன் கணக்கான நட்சத்திரங்களில் ‘எல்லா வகையான வாழ்க்கை வடிவங்களும் இருக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனால் உருவாக்கப்பட்டவர்கள், பிற உயிரினங்களும் அவ்வாறு உருவாக்கப்பட்டதால் நம் கண்ணுக்கு தெரிகின்றன.

ஆனால், நமக்கு தெரியாத வேதியல் கூறுகளால் ஏலியன்கள் உருவாகியிருக்கலாம், இதனால் தான் அவர்கனை நாம் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.

அவர்கள் நம்மிடையே கூட இருக்கக்கூடும், அவர்களைப் பார்க்க முடியாது என்றும் ஹெலன் ஷர்மன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்