ஈரானில் பிரித்தானிய தூதர் கைது செய்யப்பட்டது உண்மையில் எதற்காக? விடுவிக்கப்பட்ட பின்னர் அவரே வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

ஈரானில் பிரித்தானிய தூதர் கைது செய்யப்பட்ட நிலையில் தான் எந்தவித ஆர்பாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கான பிரித்தானிய தூதர் ராப் மாகெயர் (53) தலைநகர் Tehran-ல் உள்ள Amir Akabir Universityல் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்பட்டது.

ஆனால் தான் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை என விடுவிக்கப்பட்ட பின்னர் ராப் மாகெயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், என் மீது அக்கறை கொண்டு அனுப்பப்பட்ட பதிவுகளுக்கு நன்றிகள்.

நான் எந்தவொரு ஆர்பாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளவே சென்றேன்.

இறந்தவர்களில் பிரித்தானியர்களும் இருக்கிறார்கள், அங்கு கோஷம் எழுப்ப தொடங்கிய 5 நிமிடங்களில் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

ஆனால் நான் கிளம்பிய அரை மணி நேரம் கழித்து என்னை கைது செய்தார்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்