லண்டனில் சந்தேகத்துக்குரிய வகையில் திரையரங்கம் அருகில் இருந்த பெட்டி! உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள திரையரங்கம் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பெட்டி இருந்த நிலையில் அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Vaudeville திரையரங்களில் அதிகளவு ரசிகர்கள் இருந்தனர்.

சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் திரையரங்கம் உள்ள பகுதியில் சந்தேகத்துக்குரிய பெட்டி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திரையரங்கில் இருந்த மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதோடு அப்பகுதியில் இருந்த உணவகங்களில் இருந்த வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டு அந்த சாலை மூடப்பட்டது.

@stuart_crooks

பின்னர் அந்த பெட்டி சோதனை செய்யப்பட்டது, இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான விடயம் இல்லை என சோதனை முடிவில் தெரியவந்ததாக கூறியுள்ளனர்.

திரையரங்குக்கு வந்த ரசிகர் ஒருவர் கூறுகையில், முதலில் யாரும் திரையரங்கை விட்டு வெளியேறவில்லை, பின்னரே நிலைமையை உணர்ந்து வெளியேறினோம் என கூறியுள்ளார்.

இதன் பின்னர் அந்த சாலையும், திரையரங்கமும் வழக்கம் போல செயல்பட அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

@stuart_crooks

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்