என்ன விளையாடுகிறார்களா..? ஹரி - மேகன் விவகாரத்தை கேட்டு இரத்தத்தால் காரி துப்பிய இளவரசர் பிலிப்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததை கேள்விப்பட்டு, உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இளவரசர் பிலிப் கடும் கோபமடைந்துள்ளார்.

இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர்.

இதனால் அரண்மனை வட்டாரமே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தும் முயற்சியில் ராணி உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹரி - மேகன் வெளியிட்ட அறிவிப்பால் தனது மனைவி ராணி எலிசபெத் வருத்தமடைந்திருப்பதை கேள்விப்பட்டு இளவரசர் பிலிப் கடும் கோபமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

வயது முதிர்வு காரணமாக 98 வயதான இளவரசர் பிலிப் 2017ம் ஆண்டு, அரச பொது கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு வீடு திரும்பிய அவர் சாண்ட்ரிங்ஹாமில் உள்ள தனது வீட்டில் படுத்த படுக்கையாக ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹரி மற்றும் மேகன் குறித்து அறிந்ததும் இளவரசர் பிலிப், இரத்தத்தால் காரி துப்பி, அவர்கள் என்ன விளையாடுகிறார்களா? என கடும் கோபமடைந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்