அரச குடும்ப பிரச்சனைகளால் 'பலிகடாவாக' மாறிய ராணியின் உதவியாளர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
403Shares

பிரித்தானிய அரச குடும்பத்தை பாதிக்கும் அவதூறுகளுக்கு மத்தியில் ராணியின் உயர்மட்ட உதவியாளர் 'பலிகடாவாக' இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் ஆகியோர் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, கடந்த 8ம் திகதி வெளியிட்ட அதிர்ச்சியான அறிவிப்பினை தொடர்ந்து, அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இளவரசி அன்னே மற்றும் இளவரசர் எட்வர்ட், இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது தனியார் செயலாளர் சர் எட்வர்ட் யங்கை பணிநீக்கம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்தது, இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான நட்பால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது என அரச குடும்ப பிரச்சனைகளை சரியான முறையில் கையாளத் தவறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோரால் லார்ட் கீட் "நீக்கப்பட்ட" பின்னர் சர் எட்வர்ட் யங் பதவி உயர்வு பெற்றார்.

அரச குடும்பத்தை பாதிக்கும் சிக்கல்களுக்கு மத்தியில், அனைத்தையும் கையாளத் தவறிவிட்டார் என யங் மீது பழி விழுந்துள்ளது. யங் "புத்திசாலித்தனமாகவும் உள்ளுணர்வுடனும்" இருக்கத் தவறிவிட்டதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் சர் எட்வர்ட் யங், ஜனவரி 13 திங்கள் அன்று சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் நடைபெறும் அரச குடும்ப நெருக்கடி பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்