உடை மாற்றும் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த நபர்: வகையாக சிக்கியது இப்படித்தான்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உடை மாற்றும் அறை மற்றும் கழிவறைகளில் மொபைல் போனை மறைத்து வைத்து பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஒருவர் வகையாக சிக்கினார்.

தனது வீட்டிலுள்ள கழிவறையை பயன்படுத்திய பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார் Devonஐச் சேர்ந்த Graeme Croucher (35) என்னும் பிரித்தானியர்.

ஒரு பெண் தற்செயலாக சாம்பல் நிற சாக்ஸ் ஒன்று கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு சந்தேகப்பட்டு அதை எடுத்துப் பார்க்கும்போது, அதில் ஒரு மொபைல் போன் மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார்.

அந்த போனை சோதித்தபோது, தான் உட்பட சில பெண்கள் உடை மாற்றும் மற்றும் கழிவறையை பயன்படுத்தும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

பொலிசார் Croucherஐக் கைது செய்து விசாரித்தபோது தான் குற்றம் செய்ததை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை.

ஆனால், 14 வயது பெண் ஒருவர் உடைமாற்றும்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், Croucher தான் மொபைல் போனை கொண்டு உடை மாற்றும் அறைக்குள் வைப்பதையும் கவனிக்காமலே தவறுதலாக வீடியோ எடுத்துள்ளார்.

எனவே, ஆதாரத்துடன் Croucher வசமாக சிக்கிக்கொண்டார். சிறையிலடைக்கப்பட்டுள்ள Croucher, பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, எதிர் காலத்தில் சிறுவர் சிறுமியரை சந்திக்கவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...