குப்பை தொட்டியில் உள்ள உணவை சாப்பிடும் இளவரசர் ஹரி! சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா
833Shares

அமெரிக்கவின் பிரபல பத்திரிக்கை ஒன்று இளவரசர் ஹரி அரச பொறுப்புகளில் இருந்து வெளியேறி தனியாக வசிக்க உள்ளதை மோசமாக கிண்டலடிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அரச பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதற்கு ஒப்புதல் அளித்து பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிக்கையை வெளியிட்டார்.

ஹரியின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான the onion இது தொடர்பில் ஹரியை மோசமாக கிண்டலடித்து புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த செய்தியில், அரச குடும்பத்தில் இருந்து விலகிய 24 மணி நேரத்துக்குள் ஹரி சாப்பாட்டுக்கு சிரமப்பட்டு குப்பைத்தொட்டியில் இருக்கும் உணவை எடுத்து சாப்பிடுகிறார் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில் அழுக்கு உடையுடன் குப்பை தொட்டி அருகில் ஹரி இருப்பது போன்ற கற்பனையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அதே போல அங்குள்ள பேருந்து நிலையத்தில் நிற்கும் பயணிகளிடம் மேகன் தனது குழந்தையை விற்க முயல்வதாகவும் கிண்டலாக கூறப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிக்கையின் இந்த பதிவை பார்த்த பலரும் இப்படியெல்லாம் இளவரசரை கிண்டலடிப்பது தவறு என கூறி வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்