துண்டு துண்டாக நொறுக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்: பொதுமக்களை நடுங்க வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அயர்லாந்து தலைநகரில் பை ஒன்றில் சிதைக்கப்பட்ட மனித உடல் பாகங்களை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்ததை அடுத்து பொலிசார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தலைநகர் டப்ளினில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் பை ஒன்றை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகமடைந்த அந்த இளைஞர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், அந்த மர்ம பையை கைப்பற்றி, சோதனையிட்டுள்ளனர்.

அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் இருந்துள்ளது.

(Image: Colin Keegan)

தற்போது, அந்த உடல் பாகங்கள், சில நாட்களாக தேடப்பட்டு வரும் 17 வயது இளைஞரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.

டப்ளினில் போதை மருந்து கும்பலுக்கு இடையேயான மோதலில், குறித்த இளைஞர் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட உடல் பாகங்களை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் பொலிசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கபட்ட சடலத்தின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை என்பதால், பொலிசார் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

(Image: Colin Keegan)
(Image: Colin Keegan)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்