ஈரானில் கைது செய்யப்பட்ட பிரித்தானியா தூதர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

ஈரானில் கைது செய்யப்பட்ட பிரித்தானியா தூதர் ராப் மெக்காரே குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே உச்சக்கட்ட பதட்டம் நிலவி வந்த நேரத்தில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு பயணிகள் விமானத்தை சுட்டு தாங்கள் தான் வீழ்த்தியதாக ஈரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, விமானம் சுட் டு வீழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

குறித்த போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி பிரித்தானியா தூதர் ராப் மெக்காரேவை ஈரான் அதிகாரிகள் கைது செய்தனார்.

பிரித்தானியா தூதரான ராப் மெக்காரே கைது சம்பவத்தை அப்பட்டமான சர்வதேச சட்ட விதி மீறல் என்று பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தற்போது ஈரானுக்கான பிரித்தானியா தூதர் ராப் மெக்காரே நாட்டை விட்டு வெளியேறியதாக ஈரானிய அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ராபர்ட் மாகேர் முறையாக அறிவித்த பின்னரே நாட்டை விட்டு வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து விரிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்