பிரித்தானிய இளவரசியின் மீதான மரியாதை முடிவுக்கு வந்ததா?: மீண்டும் மேகனின் கவர்ச்சி படங்களை வெளியிடும் ஊடகங்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு அமெரிக்கப்பெண்ணை, அதுவும் விவாகரத்தான, ஒரு நடிகையை ராஜ குடும்பத்துக்குள் கொண்டுவந்தபோது, ஊடகங்கள் பல அவரை மோசமாக விமர்சித்து எழுதியிருந்தன.

அவரது திருமணத்துக்கும் சற்று முன் கூட, அவரது கவர்ச்சிப் படங்களும், வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பின்னர் அரண்மனை சார்பில், இளவரசர் ஹரியின் மனைவியை தொந்தரவு செய்யவேண்டாம் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரே மேகன் மீதான விமர்சனங்கள் முடிவுக்கு வந்தன.

தற்போது, ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற ஹரி மேகன் முடிவு செய்த பின்னரும், ஹரி ஊடகங்கள் இடையூறு செய்ததாக கடுமையாக விமர்சித்திருந்ததோடு, குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக செய்திகளைக் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வளவு நாளும் கௌரவம் காத்துவந்த ஊடகங்கள் மீண்டும் மேகனின் கடந்த கால வாழ்க்கை குறித்த செய்திகளையும், அவரது கவர்ச்சிப்படங்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று, மேகன் உள்ளாடைகள் தெரியும் விதத்தில் உடையணிந்து நிற்கும் ஒரு படத்தையும், வெறும் உள்ளாடைகளுடன் யோகாவுக்கு போஸ் கொடுப்பதுபோல் நிற்கும் படங்களையும் வெளியிட்டுள்ளது.

thesun

’எனது கால்கள் ஒரு மைல் நீளமானவை, அதை முக்கியப்படுத்தி நீங்கள் எனக்கு விளம்பர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம்’ என்று அவர் விளம்பர ஏஜன்சி ஒன்றிடம் பேசியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அத்துடன், யாரோ ஒரு வயதான இளவரசரை பிடிப்பதற்காக அல்ல, இளவரசர் பொறுப்பிலிருக்கும் ஒருவரை பிடிக்கும் திட்டத்துடன் இருப்பதாக மேகன் தெரிவித்ததாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

அவற்றைப் பார்த்தால், மீண்டும் ஊடகங்கள் ஹரி மேகனை குறிவைப்பதுபோல் தெரிகிறது.

Credit: Getty - Contributor

thesun

Credit: Getty - Contributor

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்