குளியலறையில் சுருண்டு கிடந்த 8 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த பெண்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குளியலறையில் 8 அடி நீள பாம்பு இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இங்கிலாந்தின் Birkenhead பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், தன்னுடைய வீட்டின் குளியலறைக்கு சென்றுள்ளார்.

அப்போது 8 அடி நீள boa constrictor வகையை சேர்ந்த பாம்பு ஒன்று குழாயை சுற்றிவளைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக இந்த தகவலறிந்து வந்த அதிகாரிகள், நீண்ட நேரமாக போராடியும் அதனை பிடிக்க முடியாமல் திணறியுள்ளார்.

அதன்பிறகு அந்த பாம்பை நன்கு கையாள தேர்ந்த கிறிஸ் ஈஸ்ட்வுட் என்கிற காஸ்டபிளை பொலிஸார் வரவழைத்தனர். சிறிது நேரத்திற்கு பின், அந்த பாம்பு அங்கிருந்து பிடிக்கப்பட்டு தற்காலிகமாக உள்ளூர் செல்லப்பிராணி மீட்பு நிலையத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விஷத்தன்மையற்ற அந்த பாம்பானது வெப்ப மண்டலம் சார்ந்த வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், கரீபியிலுள்ள சில தீவுகளிலும் காணப்படுகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers